இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்துள்ள சர்வதேச கடல் மாநாடு எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி தொடர்பாடல் 2016' என்ற நாமகரத்தில் இந்த மாநாடு நடைப்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த கடற்படை மற்றும் நீரியல் தொடர்பான நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் முக்கிஸ்தர்கள் பலரும் இதில் கலந்துக் கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிகழ்வில் 40 நாடுகள் மற்றும் 12 சர்வதேச அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் தமது அனுபவங்களை இந்த மாநாட்டின் போது பகிர்ந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment