//]]>

Sunday, December 18, 2016

கிளிநொச்சியில் மூளைக்காய்ச்சல் காரணமாக ஐந்து வயதுக் குழந்தை பலி


கிளிநொச்சியில் மூளைக்காய்ச்சல் காரணமாக ஐந்து வயதுக் குழந்தையொன்று  உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை(18) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த விஜயராஜ் விஷ்ணுஜன் எனும் குழந்தையே மூளைக்காய்ச்சல் காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சில நாட்களாக காய்ச்சலும் வாந்தியும் இருந்துள்ளது.இந்த நிலையில் குறித்த குழந்தையை இன்று மாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குக்  கொண்டு சென்ற போது குறித்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment