மேற்கிந்திய தீவுகள் அணியுடனான நேற்றைய போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்துவீச்சை நிறைவு செய்யாமை காரணமாக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிம்பாபேவில் இடம்பெறும் ஒருநாள் கிரிக்கட் போட்டியில், நேற்றையதினம் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதின.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்துவீச்சை நிறைவு செய்யாமை காரணமாக அனைத்து வீரர்களுக்கும் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 20 வீதமும் அணித்தலைவருக்கு 40 வீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டு ஓவர்கள் பந்து வீச தாமதமானமையால் அணித் தலைவர் உபுல் தரங்கவின் சம்பளத்தில் 40 வீதமும் ஏனைய வீரர்களின் சம்பளத்தில் 20 வீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் ஒரு ஓட்டத்தால் இலங்கை அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
0 comments:
Post a Comment