டோக்கியோவில் அரை நூற்றாண்டு கழித்து, நவம்பர் மாதம் பனிப் பொழிந்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. டோக்கியோ நகரை விட சுற்றுப்புறத்தில் இருக்கும் புறநகர் பகுதியில் பனி அதிகமாக பொழிந்துள்ளது எனக் கூறப்படுகிறது.
இந்த திடீர் பனிப்பொழிவு பற்றி,'இந்த பனிப்பொழிவு வந்துள்ளதால், குளிர்காலம் கடுமையாக இருக்கும் என்று எண்ண வேண்டாம். இது எதேச்சையாக நடந்த ஒரு சம்பவம்.' என்று கூறியுள்ளது ஜப்பான் வானிலை மையம்.
டோக்கியோவின் மத்தியப் பகுதியில் 1962 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் நவம்பர் மாதத்தில் பனிப்பொழிகிறது என்று கூறுகிறது ஜப்பாற் வானிலை மையம்.
0 comments:
Post a Comment