நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை(30) காலை-08 மணி முதல் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் இன்று காலை முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர மருத்துவ சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் இடம்பெறவில்லை. இதன் காரணமாக நோயாளர்கள் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய குழுக் கூட்டத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதெனத் தீர்மானம் எடுக்கப்பட்டதற்கமைய குறித்த போராட்டம் இடம்பெறுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment