யாழ். வலிகாமம் பிரதேசத்தில் பெரும்போக மரக்கறிப் பயிர்ச் செய்கையில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக ஏழாலை,குப்பிளான், புன்னாலைக்கட்டுவன், ஈவினை, குரும்பசிட்டி, கட்டுவன், தெல்லிப்பழை, அளவெட்டி, மல்லாகம், சுன்னாகம், ஊரெழு, உரும்பிராய், அச்செழு, இணுவில், கோண்டாவில், நீர்வேலி,இருபாலை, சிறுப்பிட்டி, கோப்பாய் ஆகிய இடங்களில் பச்சைமிளகாய், கோவா, கரட், பீற்ரூட், தக்காளி போன்ற பயிர்கள் பல ஏக்கர் நிலப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ளதுடன் பல நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலப் பகுதியில் பயிர்ச் செய்கைக்கான முன் ஆயத்த நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
வெளியிடங்களிலிருந்து விவசாயத்துக்குத் தேவையான பசளைகளைக் கொள்வனவு செய்வதிலும், நிலத்தைப் பண்படுத்துவத்திலும் பெரும்பாலான விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இம் முறை பருவ மழை உரிய காலப் பகுதியில் கிடைக்காமையினால் விவசாய நடவடிக்கைகளில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றன. இதேவேளை, வழமை போன்று இவ்வருடமும் வலிகாமம் பகுதியில் ஏக்கர் கணக்கில் உருளைக்கிழங்குப் பயிர்ச் செய்கை இடம்பெறவுள்ளது..
உருளைக்கிழங்குச் செய்கைக்குத் தேவையான விதை உருளைக்கிழங்கு விநியோகம் அண்மையில் யாழ்.மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment