இலங்கை அரச சேவைகள் சங்கம் நடத்திய அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டியில் வடமாகாண கல்வித்திணைக்கள அணி கிண்ணத்தை சுவீகரித்தது.
நேற்றைய தினம் இரண்டு பிரிவுகளாக கொழும்பு பல்கலைக் கழக மைதானத்திலும், கொழும்பு ரொரிண்டன் விளையாட்டு மைதானத்திலும் இப்போட்டி நடைபெற்றது.
குறித்த போட்டியின் இறுதியாட்டத்தில் வடமாகாண கல்வித்திணைக்கள அணியை எதிர்த்து அநுராதபுரம் தாதியர் அணி மோதிக்கொண்டது.
போட்டியின் முதல்பாதியாட்டத்தில் வடமாகாணக் கல்வித்திணைக்கள அணி 11:7 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியாட்டத்திலும் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திய வடமாகாண கல்வித்திணைக்கள அணி போட்டி முடிவில் 30: 20 என்ற புள்ளிகள்
அடிப்படையில் வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.
மேலும் குறித்த போட்டியின் கலப்பு ஆட்டத்தில் யாழ் மாவட்டச் செயலக அணி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment