//]]>

Sunday, November 27, 2016

பாட்மிண்டன் இறுதிப்போட்டியில் சிந்து தோல்வி


ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் சீன தைபே வீராங்கனை தை ஸூ யிங் என்பவரிடம் சிந்து நேர் செட்களில் தோல்வி தழுவினார்.

41 நிமிடங்களே நீடித்த இறுதிப் போட்டியில் சிந்து 15-21, 17-21 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார். உலகின் 3-ம் நிலை வீராங்கனையான சூ யிங் முதல் செட்டில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினார், துல்லியமான அவரது தாக்குதல் ஆட்டத்தில் சிந்து நிலைகுலைந்து 11-18 என்று பின் தங்கினார். யிங்கின் வேகத்துக்கும் சுறுசுறுப்புக்கும் சிந்துவின் ஆட்டம் ஈடுகொடுக்க முடியவில்லை.

ஆனால் 2-வது செட்டில் சிந்து தனது ஆட்டத்தை மேம்படுத்தி சற்றே சவால் அளித்தார், ஆனாலும் யிங்கின் வேகம் மற்றும் பன்முகத் திறமைக்கு சிந்துவிடம் பதில் இல்லை. இதனால் 17-21 என்று 2-வது செட்டையும் ஆட்டத்தையும் இழந்தார்.

சிந்து என்ன அடித்தாலும் அதற்கு தகுந்த எதிர்ஷாட்களை யிங் வைத்திருந்தார். ஆனாலும் 2-வது செட்டில் சிந்து 10-10 என்று ஒருசமயத்தில் சமன் செய்தார். பிறகு யிங் ஒரு ஷாட்டை வெளியே அடிக்க சிந்து 11-10 என்று முன்னிலை கூட பெற்றார். சவால் அளிப்பதில் பின் வாங்காத சிந்து மேலும் சில புள்ளிகளைப் பெற முடிந்ததே தவிர யிங்கை முறியடிக்க முடியவில்லை.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment