டேவிட் குட்ஆல் என்ற விஞ்ஞானி 102 வயதிலும் அவுஸ்ரேலியாவின் 'Edith Cowan' பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி தொடர்பான பணிகளுக்காக அவர் தொடர்ந்து பல்கலைக்கு சென்று பணியாற்றி வருகிறார். தினசரி ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து நான்கு, ஐந்து வழித்தடங்களில் மாறி, அவர் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார்.
இதனால், பல்கலைக்கழக நிர்வாகம் அவரது உடல்நிலையைக் கருதி 2017-ஆம் ஆண்டு முதல் அவரை வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுறுத்தியது. ஆனால், அதை டேவிட் ஏற்கவில்லை.
இதையடுத்து, அவரது வீட்டிற்கு அருகிலுலுள்ள ஒரு கேம்பஸில் அவருக்கென அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டேவிட் குட் ஆல் கருத்துத் தெரிவிக்கையில், "எனது பழைய அலுவலகத்தை ரொம்பவே மிஸ் செய்கிறேன். எனது உடல்நிலைக் கருதி செய்யப்பட்ட இந்த மாற்றம் தேவையற்றது" எனத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment