தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ் அறிஞர்களில் தலைமகனாகத் திகழ்கின்ற பேராசிரியர் க.கைலாசபதியின் '34 ஆவது ஆண்டு நினைவுக் கருத்தரங்கு' நிகழ்வு நாளை சனிக்கிழமை (24) பிற்பகல்-03.30 மணி முதல் இல. 62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தி எனும் முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகரும், எழுத்தாளருமான க. சிவகரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் 'ஈழத்தில் இந்து அடிப்படைவாதம்' எனும் தலைப்பில் நினைவுரையை த. ஸ்ரீ பிரகாஸ் ஆற்றவுள்ளதுடன், கருத்துரைகளை ச. சத்தியதேவன், க.கணேஸ் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
ஆர்வமுள்ள அனைவரையும் இந் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தேசிய கலை இலக்கியப் பேரவையினர் கேட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment