//]]>

Friday, December 23, 2016

வடமாகாணக் கடமை நிறைவேற்று அதிபர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும்: வடமாகாண சபைக்கு முன்பாகப் போராட்டம் (Photo)

வடமாகாணக் கடமை நிறைவேற்று அதிபர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி வடமாகாணக் கடமை நிறைவேற்று அதிபர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நேற்று வியாழக்கிழமை(22) வடமாகாண சபைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது வடமாகாணக்  கடமை நிறைவேற்று அதிபர்கள் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும், அதற்கான தீர்வு கோரியும் வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனிடம்  மனுவொன்றைக் கையளித்தனர்.

குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களில் ஏழு மாகாணங்களில் கடமை நிறைவேற்று அதிபர்களுக்குப்  பாதிப்பில்லாத வகையில் புதிய அதிபர்களுக்கு வெற்றிடமாகவுள்ள பாடசாலைகளில் பிரதி அதிபர், உதவி அதிபர் பதவிகள் வழங்கப்பட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

ஆனால், வடக்கு மாகாணத்தில் மாத்திரம் மாறாகக் கடமை நிறைவேற்று அதிபர்களை நீக்க எடுக்கும் முயற்சி மிகவும் வேதனைக்குரிய விடயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிகள் வடமாகாணக் கல்வியமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்கள், வட மாகாண  எதிர்க்கட்சித் தலைவர், வடமாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க செயலாளர் ஆகியோருக்கும் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment