முல்லைத்தீவு மாவட்டத்தில் 35 ஆயிரத்து 510 ஏக்கர் நிலம் படையினர், வன வள பரிபாலன சபை மற்றும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் இவற்றில் படையினரால் மாத்திரம் 16 ஆயிரத்து 910 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமாகாணசபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் முதலமைச்சரின் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான இரண்டாம் நாள் விவாதம் பேரவைச் செயலகத்தின் சபா மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற போதே
வடமாகாணத்தில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment