//]]>

Wednesday, December 14, 2016

யாழ்.குடாநாட்டில் திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசை (Photos)


உலக இந்து மக்களால் வருடாவருடம் அனுஷ்டிக்கப்படும் திருக் கார்த்திகை விளக்கீடு கார்த்திகை மாத பெளர்ணமி தினமாகிய நேற்று  செவ்வாய்க்கிழமை(13) யாழ். குடாநாட்டில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.  
யாழ்.மாவட்டத்திலுள்ள வீடுகள் தோறும் நேற்று மாலை முதல் இரவு வரை சிறுவர் முதல் பெரியோர்கள் வரை கார்த்திகை தீபங்களை நீண்ட வரிசையில் ஏற்றிக் கார்த்திகை விளக்கீட்டை மகிழ்வுடன் வரவேற்றனர். வீடுகளின் முன்பாக வாழைக்குற்றிகள் நடுகை செய்து அதன் மேல் தேங்காய்ப் பாதிகளில் நெய்தீபமேற்றியும், தீப்பந்தங்கள் கொளுத்தியும் வழிபட்ட காட்சி பக்திபூர்வமாகவிருந்தது. 
அத்துடன் வர்த்தக நிலையங்கள், தொழில் ஸ்தாபனங்கள் முன்பாகவும் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டதுடன், ஆலயங்களில் திருக் கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகளும், சொக்கப் பனை எரிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment