//]]>

Monday, December 18, 2017

யாழ். மாநகரசபை மேயர் வேட்பாளர் தெரிவு: தமிழரசுக் கட்சிக்குள் கடும் முரண்பாடு


யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளர் தெரிவு தொடர்பில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்து வரும் முரண்பட்ட கருத்துக்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.  மாநகர சபையின் மேயர் வேட்பாளராக இ. ஆர்னோல்ட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரேரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இன்று(18)  யாழில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். இதன் காரணமாக மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் இராஜினாமாச் செய்திருப்பதாகவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்

எனினும், கூட்டமைப்பின் யாழ். மாநகர வேட்பாளராக இ. ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்றைய தினம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார். 

யாழ். மாநகர சபையின் வேட்பாளராக இ. ஆர்னோல்ட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரேரித்துள்ளதாக  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இன்றைய தினம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ள நிலையில் குறித்த செய்தி உண்மைக்கு மாறானது என அக் கட்சியின் பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டிருப்பது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளர் தெரிவு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் வெளியிட்டிருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் தமிழர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment