//]]>

Friday, December 23, 2016

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் செயற்பட சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாம் அரசாங்கம்..!

கடந்த ராஜபக் ஷ  அரசாங்கம் ஊடகவியலாளர்களை வெள்ளை வான்களில் கடத்திச் சென்றது. ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். ஆனால், எமது அரசாங்கம் ஊடகவியலாளர்களைச்  சுதந்திரமாக செயற்பட சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது எனச் சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள அவரது அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எமது அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்குத் தொந்தரவுகளையோ , இடையூறுகளையோ கொடுக்காது.

எனினும், சில ஊடவியலாளர்கள் இந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment