இந்தியாவின் 'அமேசான் நிறுவனம்' வருடாந்த வாசிப்பிற்கான ஆய்வு மேற்கொண்டு பட்டியல் வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வில் அதிக புத்தகம் வாசிப்போர் நிறைந்த பட்டியலில் தொடர்ச்சியாக நான்காவது தடவையாக டெல்லி முதலிடம் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் பெங்களூரு இரண்டாமிடத்தையும், மும்பை மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த கோயம்புத்தூர் மாவட்டமும் முதல் இருபது நகரங்கள் அடங்கிய பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அதிகம் விற்பனையான புத்தகமாக சேத்தன் பகத் எழுதிய 'ஒன் இந்தியன் கேர்ள்' என்ற புத்தகம் முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்களே இந்த ஆண்டும் அதிகம் விற்பனையானதாக அமேசான் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment