அதிக மதிப்புடைய ரூபாய் தாள்கள் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் படேல் வரவேற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம், ஊழல் மட்டுமல்லாது கருப்புப் பணமும் ஒழிக்கப்படும். இந்த நடவடிக்கையால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணமும் இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவரப்படும்'' என்றார்.
0 comments:
Post a Comment