இந்தியாவில் பழைய
ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு நிகராக புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்படமாட்டாது
என்று இந்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்தார்.
ரொக்கப் பரிவர்த்தனைக்கு
மாற்றாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்பதும் பழைய ரூபாய் நோட்டுகளை
திரும்பப் பெற்றதற்கான காரணங்களில் ஒன்றாகும். எனவே திரும்பப் பெறப்படும் பழைய ரூபாய்
தாள்களுக்கு நிகராக புதிய தாள்கள் வெளியிடப்படமாட்டாது என்று தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில்
ஜேட்லி தெரிவித்தார்.
இதற்கிடையே, ரூ.5.5
லட்சம் கோடி புதிய 2000, 500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக இந்திய அரசு
தெரிவித்தது.
0 comments:
Post a Comment