கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்தில் நீராடுவதற்காகச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் இன்று புதன்கிழமை(07) பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனை விழுந்தான் குளத்தின் சேற்றில் புதையுண்டு இரு சகோதரிகளும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்களில் ஒருவர் அண்மையில் திருமணவாராவார்.
குறித்த இரு சகோதரிகளினதும் சடலங்கள் அக்கராயன் பொது வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
0 comments:
Post a Comment