//]]>

Wednesday, December 7, 2016

யாழ். மாவட்டத்தில் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள கூட்டுறவுத்துறை (Photo)


எமது மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை பல பாதிப்புக்களை எதிர்நோக்கிய ஒரு துறை. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்ட ஈடு இன்னமும் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.  

யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபையின் எற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கூட்டுறவுப் பெரியார் அமரர்- வீரசிங்கத்தின் உருவச் சிலை திறப்பு விழாவும், 52 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(05) முற்பகல் நடைபெற்றபோது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்த முடியாத துரதிஷ்ட வசமான நிலைக்கு நாம் தற்போது தள்ளப்பட்டுள்ளோம். மாற்றத்தின் ஊடாகத் தான் நாங்கள் சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும்.  

மீண்டும் கூட்டுறவுத் துறையைக் கட்டியெழுப்புவதற்குக் கூட்டுறவுத் தொழிலுக்கு அர்ப்பணிப்புடையவர்கள் மிகவும் அவசியம். அத்துடன் அவர்களுடைய தூரநோக்குடைய செயற்பாடுகளும் எமது மக்களுக்குத் தேவை என்றார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment