//]]>

Friday, December 16, 2016

கருணாநிதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதி


தி.மு.க தலைவர் கருணாநிதி 15-12-16 அன்று நள்ளிரவு உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலம் சரியில்லாமல் தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பின்னர் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர்.

உடல் நிலையில் முன்னேற்றம் பெற்ற கருணாநிதி கடந்த 7ம்தேதி கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றார்.

இந்நிலையில் தற்பொழுது, சுவாசக் கோளாறு, நுரையீரல் பிரச்சனை மற்றும் தொண்டையில் நோய் பாதிப்பு மற்றும் சளித் தொல்லை காரணமாக மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் பொதுமக்களும், கட்சி தொண்டர்களும், மருத்துவமனையின் முன்பு குவிந்தனர். தகவல் அறிந்த தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களான  பொன்முடி, துரைமுருகன், எ.வ.வேலு  மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகியவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். இதனால் மருத்துவமனையின் முன்பு பரபரப்புக் கூடியது.மருத்துவர்கள் கருணாநிதிக்கு சிகிச்சை மேற்கொண்டிருந்த நேரத்தில், ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.


இந்நிலையில் 12 மணியளவில் காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதில் 'திமுகவின் தலைவரும், தமிழக முன்னாள் முதல் அமைச்சருமான கருணாநிதி காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.நுரையீரல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக , சுவாசக் கோளாறு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.தொற்றை சரிசெய்வதற்கான சிகிச்சைகள் தரப்படுகிறது. மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்." என்று இருந்தது

மருத்துவமனை அறிக்கையை பார்த்த பின்புதான் அங்கு கூடி இருந்த பொதுமக்களும், தி.மு.க. தொண்டர்களும் நிம்மதி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து தி.மு.க. அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறத் தொடங்கினர். அதன் பின் சரியாக 1.24 மணிக்கு கனிமொழி மருத்துவமனையை விட்டு வெளியேறினார். கனிமொழியை பார்த்ததும் பத்திரிகையாளர்கள் சுற்றி வளைத்து, என்ன நடந்தது? இப்போது கலைஞர் எப்படி இருக்கிறார்? என கேட்க... "தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தொற்றுகள் அகற்றப்பட்டுவிட்டன. கலைஞர் நலமாக இருக்கிறார். யாரும் கவலைகொள்ள வேண்டாம்"  என்று மட்டும் சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டார்

அதன் பின் 1.27 மணிக்கு ஸ்டாலின் மருத்துவமனையை விட்டு வெளியேறியவர் "அப்பாவுக்கு ஒன்றும் இல்லை, நன்றாக இருக்கிறார்" என்கிற தொனியில் கையசைத்து விட்டு சென்றார். கனிமொழியின் அறிவிப்பும் ஸ்டாலின் தன்னம்பிக்கையான கையசைவையும் பார்த்து பொது மக்களுக்கும், தி.மு.க. தொணடர்களுக்கும் பதற்றம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பினர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment