//]]>

Tuesday, December 20, 2016

ரவிராஜ் கொலைவழக்கின் முதலாவது சாட்சியாளர் தாக்கல் செய்த பிணை மனு நிராகரிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் முதலாவது சாட்சியாளரான பிரித்திவிராஜ் தாக்கல் செய்திருந்த பிணை மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை(20) நிராகரித்துள்ளது.

குறித்த சாட்சியாளருக்குப்  பிணை வழங்குமாறு பிரித்திவிராஜ்ஜின் சட்டத்தரணி நேற்று விசேட ஜூரிகள் முன்னிலையில் கோரிக்கை முன்வைத்திருந்தார். எனினும், குறித்த மனுவை பரிசீலனை செய்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ம. வைத்தியதிலக்க மனுவை நிராகரித்துளளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கின் சந்தேகநபராக முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்திவிராஜின் பெயர் முதலில் பெயரிடப்பட்டிருந்த போதிலும் பின்னர் சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட நிபந்தனையுடனான மன்னிப்பின் கீழ் அவர் அரசதரப்புச் சாட்சியாளராகப்  பெயரிடப்பட்டார்.

கொலை வழக்கின் சந்தேகநபராகக்  கைது செய்யப்பட்ட முன்னாள் கான்ஸ்டபிள் கடந்த- 21 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment