நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு யாழ்.மாவட்டத்திலுள்ள சிகை ஒப்பனை நிலையங்களின் நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த மாதம்-19 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இந்த நேரக் கட்டுப்பாடு அமுலிலிருக்கும் எனவும் யாழ்.மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம்-02 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளமையால் மாணவர்களி ன் நலன்கருதி விடுமுறை நாளான ஜனவரி மாதம்-01 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று தொழில் நிலையங்களைத் திறந்து மக்களுக்குச் சேவையாற்றுமாறும் யாழ்.மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம் கேட்டுள்ளது.
0 comments:
Post a Comment