வடமாகாணத் தொண்டர் ஆசிரியர்கள் நேற்றுப் புதன்கிழமை(28) காலை முதல் வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று மாலையுடன் தற்காலிகமாக முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம்-04 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பில் கலந்துரையாடுவதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உறுதியளித்ததைத் தொடர்ந்து உணவு தவிர்ப்புப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக வடமாகாணத் தொண்டராசிரியர் சங்கத்தின் தலைவர் இ.ஜெயராஜ் தெரிவித்தார்.
தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வடமாகாணத் தொண்டராசிரியர்கள் நேற்றுக் காலை-09.30 மணி முதல் யாழிலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தின் முன்பாக ஒன்று கூடி உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் சிலர் நேற்று மாலை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து போராட்டம் தாற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment