கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியிலுள்ள சில்லறை விற்பனை நிலையமொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை(13) பிற்பகல் ஏற்றப்பட்டிருந்த கார்த்திகைத் தீபம் அங்கு விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்களின் மீது சரிந்து வீழ்ந்ததில் பரவிய தீ காரணமாகக் குறித்த விற்பனை நிலையம் எரிந்து நாசமாகியுள்ளது.
பிரதேச வாசிகள்,அயல் வர்த்தகர்கள் ஆகியோர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதும் என்பது வீதமான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரியவருகிறது.
எனினும், மேற்படி சம்பவத்தால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் அறிய முடிகிறது.
0 comments:
Post a Comment