யாழ்ப்பாணம் பனை ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஆய்வு நூல் வெளியீடு நாளை(19) பிற்பகல் ஒரு மணி முதல் யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இடம்பெற உள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை இலங்கை பூராகவும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை உள்ளடக்கிய குறித்த ஆய்வு நூல் ஆங்கிலத்தில் வெளிவர உள்ளதுடன் இதன் தமிழாக்கம் விரைவில் வெளிவர உள்ளதாக பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் வைத்திய கலாநிதி சி.சிவசங்கர் தெரிவித்தார்.
குறித்த ஆய்வு நூலின் வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மோகனதாஸ் நிகழ்த்த இருக்கின்றார்.
"ஆராய்ச்சியின் ஊடாகப் பனை கைத்தொழிலின் மேம்பாடு 2016" எனும் தொனிப் பொருளில் நடைபெறவுள்ள இந்த ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வை பனை அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கும் பனை ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
170 பக்கங்களைக் கொண்ட இந்த ஆய்வு நூலில் 'பனையின் மருத்துவ முக்கியத்துவம்', 'போசணை முக்கியத்துவம்', 'பனை உற்பத்தி சார் புதிய கண்டுபிடிப்புக்கள்', 'பனை ஆராய்ச்சி சார் கட்டுரைகள்', 'பானை உற்பத்தித் திறனை அதிகரிப்பது தொடர்பிலான கட்டுரைகள்' எனப் பல்வேறு விடயங்களை உள்ளடக்கி வெளிவர உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment