இந்தியாவின் உத்தரப்
பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜவாதி கட்சியின் தேசியத் தலைவரான முலாயம் சிங் யாதவ்,
தனது மகனும், அந்த மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவை கட்சியிலிருந்து அதிரடியாக
வெள்ளிக்கிழமை (டிச.30) நீக்கினார்.
அந்த மாநிலத்தில்
அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தச் சம்பவம்
அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே
முலாயம் சிங் யாதவ் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
இந்தச் சண்டை அண்மையில்
வெளி உலகத்துக்கு தெரியவந்தது.
0 comments:
Post a Comment