தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையினால் இம்மாதம் (2016) ஆரம்பத்தில் நடாத்தப்பட்ட NAITA உப பரிசோதகர் தரம்(3) பரீட்சைப் பெறுபேறுகள் இல்லாமல் பெரும்பான்மையின பரீட்சார்த்திகள் பலர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பதவிற்காக நாடளாவிய ரீதியில் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பரீட்சை நடாத்தப்பட்டிருந்தது.இப்பரீட் சைக்கு வடக்கு கிழக்கில் இருந்து பெருந்தொகையான தமிழ் பேசும் பட்டதாரிகள் கொழும்பில் தங்கி இருந்து பரீட்சைகளை எழுதி இருந்தனர்.ஆனால், இன்னும் பரீட்சை எழுதியவர்களிற்கான புள்ளிகள் அறிவிக்கப்படவில்லை.
எனினும், இப்பதவிற்காக நியமனம் கடந்த 1.12.2016 முதல் வழங்கப்பட்டுள்ளது.
முழுக்க பட்டதாரிகளுக்காக இப்பரீட்சை நடாத்தப்பட்டு இறுதியில் பரீட்சைப் புள்ளிகள் வெளியிடப்படாமல் நியமனம் வழங்கப்பட்டமையானது அவர்களது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாக உள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனவே, இவ்விடயத்தில் உரிய அதிகாரிகள் கவனமெடுத்துப் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment