//]]>

Saturday, December 10, 2016

வடமாகாண மீன்பிடி அபிவிருத்தி ஆரம்ப நிகழ்வு(Photos)

  • வடமாகாண மீன்பிடி அபிவிருத்திக்கான இணை முகாமைத்துவ செயற்பாட்டின் ஆரம்ப
  • விழா நேற்று வியாழக்கிழமை(08) யாழ். ரில்கோ விருந்தினர் தனியார் விடுதியில் நடைபெற்றது. 

  • குறித்த நிகழ்வுக்கு வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு செயற்றிட்டத்தினைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
  •  
  • எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு வடக்கு மீனவ மக்களுக்கான செயற்திட்டம் தொடர்பான முன்மொழிவுகள் இதன்போது எடுக்கப்பட்டன. எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு தேசிய கடல் பாதுகாப்பு வாரமாகவும், மீனவ குடும்ப மக்களின் நலனுக்கான வாழ்க்கை முன்னேற்பாட்டுச் செயற்றிட்டம் மற்றும் அத்துமீறிய மீன்பிடியினைத் தடைசெய்வதற்கான ஆலோசனைகள் போன்ற விடயங்கள் முன்மொழிவுக்கான செயற்றிட்ட ஆலோசனைகளாகப் பரிந்துரைக்கப்பட்டன.


  • இந்த நிகழ்வில் வட மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் திருமதி-அனந்தி சசிதரன், திணைக்களத்தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள்.பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment