தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை(14) பிற்பகல் யாழ். கந்தர்மடத்திலுள்ள கட்சியின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்று பிற்பகல்-05.15 மணி முதல் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அன்ரன் பாலசிங்கத்தின் உருவப்படம் வைத்து நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அன்ரன் பாலசிங்கத்தின் உருவப் படத்திற்கு உணர்வுபூர்வ மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரச் செயலாளர் சிவகுரு இளங்கோ, யாழ்.ஊடக அமையத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் இ.தயாபரன் ஆகியோர் நினைவஞ்சலியுரைகளை நிகழ்த்தினர்.
குறித்த நிகழ்வில் கட்சியின் மூத்த உறுப்பினர்களான பொன் மாஸ்ரர், ஜெயரட்ணம் வீரசிங்கம் உட்படக் கட்சியின் உறுப்பினர்கள்,ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment