யாழ். குடாநாட்டில் உருளைக் கிழங்குச் செய்கையில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
புன்னாலைக்கட்டுவன், வசாவிளான்,ஏழாலை, குப்பிளான், ஈவினை, கட்டுவன், தெல்லிப்பழை, சுன்னாகம், இணுவில்,மருதனார்மடம், புத்தூர், நவக்கிரி, அச்செழு, நீர்வேலி, கோப்பாய், ஊரெழு,உரும்பிராய், கோண்டாவில் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பில் உருளைக்கிழங்குச் செய்கை விவசாயிகளால் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழ்.மாவட்டத்தில் இந்த வருடம் சுமார்-210 ஏக்கர் நிலப் பரப்பில் உருளைக்கிழங்குச் செய்கை இடம்பெறுகின்றது. யாழ். குடாநாட்டில் விவசாயிகளுக்கான விதை உருளைக்கிழங்குகளை வழங்குவதற்கு மத்திய அரசின் தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தில் 22.4 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி, விவசாயிகளுக்குத் தேவையான விதை உருளைக்கிழங்குகளை விவசாயத் திணைக்களம் தருவித்து 50 வீத மானிய அடிப்படையில் விதை உருளைக்கிழங்குகளை விநியோகித்து வருகின்றது.
பிரான்ஸ் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட சசி ரக விதை உருளைக்கிழங்குகள் ஏற்கனவே உருளைக்கிழங்குச் செய்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து றெட்லசோடா வகை விதை உருளைக்கிழங்கும், நெதர்லாந்திலிருந்து அனோவா வகை விதை உருளைக்கிழங்கும் இறக்குமதி செய்யப்பட்டுச் செய்கையாளர்களுக்கு வழங்க மாவட்ட விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
0 comments:
Post a Comment