தமிழ் மக்களின் திருநாள்களில் ஒன்றான திருக்கார்த்திகைத் தீபத்திருநாள் ஒரு சிறப்பு மிக்க மகிமை பொருந்திய நல்லநாளாகும்.
ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் கார்த்திகை மாதத்திலே வருகின்ற கார்த்திகை திருக்கார்த்திகை எனப்படுகிறது.
நாளைய தினம் தான் வீடுகளில் விளக்கேற்றி தீபத் திருநாள் கொண்டாடப்படவுள்ளது.
அதற்காக இன்றைய தினம் மண்சிட்டி விளக்கு விற்பனை யாழ்ப்பாணத்தில் அமோகமாக இடம்பெற்றதை காணக் கூடியதாக இருந்தது. யாழ். திருநெல்வேலி சந்தைக்கு அருகில் மண்சிட்டி விளக்குகள் விற்பதனை படங்களில் காணலாம்.
சர்வாலய தீப நன்னாள் தான் எல்லோராலும் கொண்டாடப்படுவது. இந்த நாளில் புனித புண்ணிய நீராடி சந்தியாவந்தனம் முடித்து சிவாலய தரிசனம் செய்து திருவிளக்கேற்றி வழிபாடியற்றுதல் வேண்டும்.
வீட்டிலுள்ள சுவாமி அறையிலே குத்து விளக்கை ஏற்றி வைத்து, திருமுறைப்பாராயணம் செய்து, வசதிவாய்ப்புக்கு ஏற்றாற் போல வீடு முழுவதும் சிறிய சிட்டி விளக்குகளை அழகாக அடுக்க டுக்காக ஏற்றிவைத்து இல்லத்தைப் பிரகாசமாக்கி அந்தத்தீப ஒளியிலே இறைவனைக் கண்டு வணங்குதல் வேண்டும்.
0 comments:
Post a Comment