//]]>

Thursday, January 12, 2017

'ஒக்ரோபர் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவமும் இலங்கையில் அதன் தாக்கமும்' எனும் தொனிப்பொருளில் யாழில் இன்று ஆய்வரங்கம்


மகத்தான ஒக்ரோபர் சோஷலிசப்  புரட்சியின் நூற்றாண்டை வரவேற்கும் வகையில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் 'ஒக்ரோபர் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவமும் இலங்கையில் அதன் தாக்கமும்'  எனும் தொனிப் பொருளில் ஆய்வரங்குத் தொடரைத் தொடர்ச்சியாக நடாத்தவுள்ளது.

அந்த வகையில் முதலாவது ஆய்வரங்குத் தொடர் இ .தவராசா தலைமையில் இன்று வியாழக்கிழமை(12) பிற்பகல்-03.30 மணி முதல் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஆய்வுரையை  புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் செயலாளர் சி.கா. செந்திவேல் ஆய்வுரை நிகழ்த்துவார். ஆய்வுரையைத் தொடர்ந்து கலந்துரையாடலும் நடைபெறும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment