//]]>

Thursday, January 12, 2017

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா விமரிசை (Photos)


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா கடந்த செவ்வாய்க்கிழமை(10) காலை ஆரம்பமானது.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறத் தகுதியான மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் தமது பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

இந்தப் பட்டமளிப்பு விழா நேற்று புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. 2151 மாணவ,மாணவிகள் இந்த வருடப் பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகளாகப்  பட்டம் பெற்றனர்.

164 மாணவர்கள் பட்டப்பின் தகமைச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டதுடன், 1275 மாணவர்கள் உள்ளக மாணவர்களாகவும் பட்டம் பெற்றுக் கொண்டனர்.

484 மாணவர்கள் வெளிவாரிப்  பட்டதாரிகளாக பட்டம் பெற்றதுடன், 32 மாணவர்கள் டிப்ளோமா பட்டதாரிகளாக பட்டம் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment