//]]>

Thursday, January 26, 2017

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ். நல்லூர் முன்றலில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து     யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இன்று இடம்பெற உள்ளது.

இன்று 26.01.2017  வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறும் போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நல்லூரில் ஆரம்பம் 

இதேவேளை, வவுனியாவில் இடம்பெறும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்    நல்லூர் ஆலய வளாகத்தில் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment