யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வளாகத்துக்குள் கூட்டங்கள், போராட்டங்கள் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் தமிழ்நாட்டில் இடம்பெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நல்லூர் ஆலய முன்றலில் வெற்றிகரமாக இடம்பெற்ற நிலையில், இன்றைய தினம் மாலை வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நல்லூர் முன்றலில் போராட்டம் இடம்பெறவிருந்த நிலையில் ஆலய நிர்வாகத்தால் குறித்த அறிவித்தல் பலகை நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆலய நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு எதிர்ப்புக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
உதாரணமாக "போராட்டங்கள் செய்வதற்கு கோவில் வீதியைப் பயன்படுத்தக் கூடாதென்றால் திருவிழாக் காலங்களில் பொதுமக்களுடைய வீதியைத் தடைசெய்வதற்கு இவர்களிற்கு என்ன அருகதை இருக்கிறது?" என்றும் கேள்வியெழுப்பி உள்ளனர்.
0 comments:
Post a Comment