//]]>

Thursday, January 19, 2017

'வல்வையின் முதுசொம்' தமிழர்களின் வரலாற்று ஆவண நூல் நாளை வெளியீடு

யாழ். வல்வெட்டித்துறையின் முன்னாள் நகர சபைத் தலைவர் வல்வை ந. அனந்தராஜ் எழுதிய 'வல்வையின் முதுசொம்' தமிழர்களின் வரலாற்று ஆவண நூல் வெளியீட்டு விழா நாளை வெள்ளிக்கிழமை(20) பிற்பகல்-03 மணி முதல் வடமராட்சி வடக்குப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் த. ஜெயசீலன் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

குறித்த நூலை பிரதேச செயலர் த.ஜெயசீலன் வெளியிட்டு வைக்க முதல் பிரதியை கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியின் ஓய்வு நிலை உபஅதிபர் கலைப்பரிதி சிவா.கிருஷ்ணா மூர்த்தி பெற்றுக் கொள்ளவுள்ளார். 

நூல் வெளியீட்டுரையை எழுத்தாளர் ந. சீவரத்தினமும், நூலின் நயப்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் இ. இராஜேஷ்கண்ணாவும் ஆற்றுவர். ஏற்புரையை நூலாசிரியர் நிகழ்த்துவார். 

இந்த நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், வரலாற்றாசிரியர்கள், ஆவணப்படுத்துனர்கள், அதிபர்கள் ,ஆசிரியர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.   

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment