இந்தியாவின் தமிழகத்தில் ஜல்லிக் கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இடம்பெற்று வரும் பல்வேறு போராட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்துத் தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்று சனிக்கிழமை(21) முற்பகல் யாழ். பொதுநூலகத்துக்கு முன்பாகத் தமிழர் பண்பாட்டுப் பேரவையின் தலைவர் சுவீகரன் நிஷாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், தமிழர் பண்பாட்டுப் பேரவையின் உறுப்பினர்கள், வடமாகாணப் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
மேற்படி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 'வாடி வாசல் திறக்கும் வரை ஓயாது ஈழத்தமிழர் எங்கள் படை' , 'காலில போடுறது பாட்டா வெளியில போடா பீட்டா' போன்ற பல்வேறு பதாதைகளைத் தாங்கியிருந்தனர்.
0 comments:
Post a Comment