//]]>

Thursday, January 12, 2017

யாழ்.குடாநாட்டில் தேங்காயின் விலை திடீர் உயர்வு(Photo)


யாழ்.குடாநாட்டில் தேங்காயின் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் சிறியளவிலான தேங்காய்-25 ரூபாவாகவும், நடுத்தரவிலான தேங்காய்- 30 ரூபா முதல் 35 ரூபாவாகவும், பெரியளவிலான தேங்காய்-40 ரூபா தொடக்கம் 45 ரூபா வரையும் விற்பனை செய்யப்படுகின்றன.

 முன்னரே விடத் தேங்காய் வரத்துத் தற்போது குறைந்துள்ளதாகவும், இனிவரும் நாட்களில் தேங்காயின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment