யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் சி.வை .தாமோதரம்பிள்ளை நினைவரங்கம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(27) பிற்பகல்- 04 மணி முதல் யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறுப்பிட்டி சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவு ஒன்றியத்தின் பொருளாளர் எஸ்.செந்தில்நாதன் வாழ்த்துரையாற்றினார். வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் கெளரி முகுந்தன் தொடக்கவுரை நிகழ்த்தினார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை முதுநிலை விரிவுரையாளர் செல்வ அம்பிகை நந்தகுமரன் "சி.வை.தாமோதரம்பிள்ளை பற்றிய பதிவுகள் ஒரு நோக்கு" நினைவுப் பேருரை ஆற்றினார்.
இதன்போது தேர்ந்தெடுக்கப்பட்ட யாழ். மாவட்டத்தின் 20 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு யாழ்ப்பாணம் கரிகணன் பதிப்பகம் அன்பளிப்பில் நாவலர் திருவுருவச் சிலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ், யாழ்.பல்கலைக் கழக முகாமைத்துவ கற்கைகள் பீடாதிபதி தி.வேல்நம்பி, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பிரதி முதல்வர் ச.லலீசன், அருட்பணி ஜெறோ செல்வநாயகம், இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment