இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை அறுவடை விழா நடைபெற்றது. உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில் இவ்விழாவை முன்னெடுத்தனர்.
.
உயர்தரத்தில் விஞ்ஞானக் கல்வியை முற்கொண்டு செல்வதற்காகப் பிரதேசத்தைச் சார்ந்த முன்னோடிகளால் நடத்தப்படுவதுதான் இந்தக் கல்வி நிலையம். பொறியியலாளர் கெங்கேஸ்வரன் இதன் இயக்குநராகச் செயற்படுகின்றார்.
.
விழாவில் சிறப்பு நிகழ்வாக பட்டிமண்டபம் இடம்பெற்றது. வடபுலக் கல்வி எழுச்சிக்குப் பெரிதும் காரணமாக அமைய வேண்டியவர்கள் ஆசிரியர்களா? பெற்றோர்களா? கொள்கை வகுப்பாளர்களா? என அமைந்த இப்பட்டிமண்டபத்தில் ஆசியர்களே என விவசாய அமைச்சு உத்தியோகத்தர் ந.ஐங்கரன், மக்கள் வங்கி உத்தியோகத்தர் சி.சசீவன் ஆகியோரும், பெற்றோரே என யாழ். பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா, சட்டத்துறை மாணவர் ஜீ.சஜீவன் ஆகியோரும் கொள்கை வகுப்பாளர்களே என சமூகசேவை உத்தியோகத்தர் வே. சிவராஜா, மக்கள் வங்கி உத்தியோகத்தர் தெ.ஹர்சன் ஆகியோரும் வாதப் பிரதி வாதங்களை முன்வைத்தனர். கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் நடுவராகச் செயற்பட்டார்.
.
நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment