//]]>

Monday, January 30, 2017

புத்தர் கோவிலில் பொங்கி நேர்த்திக்கடன்: முன்றலில் தமிழ் வீரனின் சிலை (Photos)


புத்தர் கோயிலில் பொங்கல் பொங்கி நேர்த்திக் கடனை நீங்கள் காணவேண்டுமெனில்  இலங்கையின் வடமேல் மாகாணத்தில் உள்ள புத்தளம் மாவட்டத்தின் மாதம்பை என்ற இடத்துக்கு செல்ல வேண்டும். கோயிலின் பெயர் தனிவல்லவன் திருக்கோயில்.

இன்றைய பெயர் தனிவல்லப தேவாலய. தேவாலாயத்துக்குப் பக்கத்தில் பெரிய புத்தர் கோயில். தேவாலாயத்தின் அறங்காவலர் புத்த பிக்கு. தேவாலயப் பூசகர் சாதாரண சிங்களவரான புத்தர்.

வீரன் ஏறிய அழகான குதிரை. தமிழ் வீரனான தனிவல்லவன் சிலை.
நீர்கொழும்பு தொடக்கம் பொன்பரப்பி வரை நீண்ட கடற்கரையும், சார்ந்த நிலமும் தமிழர் நிலம். அங்கே தொடர் கலகம். தமிழரான கரையார் குழுவுக்கும் தமிழரான முக்குவக் குழுவுக்கும் இடையே அடிக்கடி கலகம். அக்கலகம் ஒன்றில் வீரனான தனிவல்லவனுக்கான நடுகல்.

அதுவே கோயிலாகி, தேவாலயமாகி, இன்று புத்த விகாரை கொண்ட தேவாலாயமாகப் புத்த சமயத்தவர் ஆட்சியில் உள்ளது.

அங்கு வரும் அனைவரும் இந்து சமய முறையைக் கடைப்பிடித்து நேர்த்திக் கடன் செலுத்துவர். தேங்காய் உடைப்பர். கற்பூரம் கொளுத்துவர். திருநீறு அணிவர். சந்தனம் இடுவர். பூசகரிடம் காணிக்கை செலுத்துவர். பொங்கல் பொங்குவர். அதற்காகத் தனியாக ஓடையும் அமைத்துள்ளனர்.

மறவன்புலவு சச்சிதானந்தம்-









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment