இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான அலுவலகம் இன்று வியாழக்கிழமை(26) முற்பகல்-10.30 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் குறித்த அலுவலகம் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், அமைச்சர் றிசாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வீரக்கோன், மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராய்ச்சி, பொலிஸ் உயரதிகாரிகள், படைத்தலைமையக உயரதிகாரிகள், யாழ்.மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வெளிவிவகார அமைச்சின் அனைத்துச் சேவைகளையும் இந்தப் பிராந்திய அலுவலகம் மூலம் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment