//]]>

Tuesday, February 28, 2017

நிலாவுக்குப் பயணமாக முற்பணம் செலுத்தியோர்!


அடுத்த ஆண்டின் இறுதியில் மனிதர்கள் நிலவுக்குப் போய் வருவார்கள். நாற்பத்தைந்து ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு மனிதர்கள் நிலாவுக்குச் செல்வது முதன் முறையாக நிகழவிருக்கிறது. இந்த நிலாப் பயணத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் முற்பணம் செலுத்தித் தம்மைப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தச் செய்தியை அமெரிக்க ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நேற்று ஊர்ஜிதம் செய்துள்ளது.


நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகளினால் வடிவமைக்கப்பட்ட ஸ்பேஸ்ஷிப் எனும் மிகப் பாரிய எடை தூக்கி ராக்கெட்டின் மூலம் இந்த நிலவுப் பயணம் நிகழவிருக்கிறது. ஆயினும், நிலவுச் சுற்றுலாவுக்குச் செல்லத் தம்மைப் பதிவு செய்து கொண்டுள்ள அந்த இருவரும் யார் என்பது பற்றியும் அவர்கள் எவ்வளவு பணம் செலுத்தியுள்ளார்களெனவும் நேற்றைய செய்தியாளர் மகாநாட்டில் தெரிவிக்கப்படவில்லை.


நாசாவின் ஸ்பேஸ் நிலையத்துக்கான ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரெசன் தொழில் நுட்ப நிறைவேற்றுப் பிரதம அதிகாரியான ஏலோன் மாஸ்க் (Elon Musk)  இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் ''அவ்விருவரும் நிச்சயமாக ஹொலிவூட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல.'' என வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு '' ஒருவரையொருவர் நன்கு தெரிந்த இருவர்தான் முற்பணம் செலுத்தித் தம்மைப் பதிவு செய்துள்ளனரெனவும், நிலவுப் பயணத்துக்கு முன்னம் அவர்களுக்குத் தகுந்த பயிற்சியளிக்கப்படும்.'' என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment