தி நேசன் இதழின் இணை ஆசிரியராக இருந்த கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்ளும் விசாரணைகள் முடியும் வரை இந்த ஐந்து அதிகாரிகளும் இராணுவத் தளபதியினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.
சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து புலனாய்வு அதிகாரிகள், கீத் நொயார் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment