//]]>

Tuesday, February 21, 2017

யாழ்.குடாநாட்டில் உருளைக்கிழங்கு அறுவடை மும்முரம் (Photos)


யாழ்.குடாநாட்டில்  தற்போது உருளைக்கிழங்குச் செய்கையின் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. யாழ்.குடாநாட்டில் மொத்தமாக 210 ஏக்கர் நிலப்பரப்பில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ள போதும் வலிகாமம் பகுதியிலேயே அதிகளவில் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஒக்ரோபர் மாத இறுதியில் உருளைக்கிழங்குச் செய்கை குடாநாட்டில் ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது உருளைக்கிழங்கு அறுவடையில்  விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 

குறிப்பாக வலிகாமத்தில் புன்னாலைக்கட்டுவன்,ஈவினை, ஏழாலை, குப்பிளான், குரும்பசிட்டி, வசாவிளான், சுன்னாகம், மருதனார்மடம், ஊரெழு, உரும்பிராய், அச்செழு, நீர்வேலி, கோப்பாய், அச்சுவேலி உள்ளிட்ட பகுதிகளில் உருளைக்கிழங்கு அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. 

இவ்வருடம் உருளைக்கிழங்கின் விளைச்சல் அமோகமாகவுள்ளதாக போதும் உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படாத காரணத்தால் தாம் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாக  உருளைக் கிழங்குச் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இறக்குமதி வரி அதிகரிக்கப்படாத காரணத்தால் பெருமளவு முதலீட்டில் உருளைக்கிழங்குச் செய்கை மேற்கொண்டுள்ள நாம் பெற்ற கடனை எவ்வாறு திருப்பச் செலுத்துவது என வழி தெரியாது திண்டாடுகின்றோம். உருளைக்கிழங்குகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதை இலங்கை அரசாங்கம் தடை செய்வதன் மூலம் உள்ளூர் உருளைக்கிழங்கிற்கு உரிய சந்தை வாய்ப்புக் கிடைக்கும். ஆகவே, இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். உள்ளூர் உருளைக்கிழங்குச் செய்கை ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment