சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் தமிழினத்திற்குத் துரோகமிழைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்களை நாங்கள் அடிக்கடி முன்வைப்பதால் அண்மைக் காலமாகச் சுமந்திரனுக்கு எதிராகக் கொலை அச்சுறுத்தல் நிலவுகின்றமையை எங்களுடன் தொடர்புபடுத்திச் சம்பந்தன் பாராளுமன்றத்தில் ஆற்றிய தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருக்கிறார்
அவருடை
இன்று வியாழக்கிழமை(23) பிற்பகல்-02.30 மணி முதல் யாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பாராளுமன்றத்தில் சம்பந்தன் நேற்று ஆற்றிய உரை தொடர்பாகப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சம்பந்தன் தமக்குத் துரோகமிழைப்பதாகத் தெரிவித்துப் பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியான எங்கள் கட்சியின் பெயரையோ அல்லது கட்சியின் தலைவரான என்னையோ அல்லது கட்சியின் செயலாளரையோ பெயர் குறிப்பிடாமல் தோற்றுப் போன தரப்பு ,கடந்த தேர்தலில் தமிழ்மக்களிடம் 15 ஆயிரம் வாக்குகள் பெற்ற தரப்புத் தங்களுக்கெதிராக செயற்படுவதாகக் குற்றச்சாட்டியுள்ளார். அவ்வாறெனில் தோற்றுப் போன தரப்பு யார் என ஏன் அவர் நேரடியாகக் குறிப்பிடத் தயங்குகிறார்?
நாங்கள் கடந்த ஏழு வருடங்களாக த் தொடர்ச்சியாக கூட்டமைப்பிற்கு எதிராகத் தெரிவித்து வருகின்ற கருத்துக்கள் எமது மக்கள் அனுபவ ரீதியாக விளங்கிக் கொண்ட கருத்துக்கள். இவ்வாறானதொரு நிலையில் நாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் வெறுமனே நாங்கள் தோற்றுப் போனவர்கள் என்ற விடயத்தை வைத்து அவர் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து நழுவப் பார்க்கிறார்.இதற்கும் மேலதிகமா க அவர் நாங்கள் தீவிரவாதிகள் என்றதொரு கருத்தையும் அவர் முன்வைத்திருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தேசம், தாயகம்,சுயநிர்ணயம், இறைமை, சமஸ்டி போன்ற விடயங்களைத் தேர்தல் காலங்களில் மட்டுமே உச்சரிக்கிறார்களே தவிர உண்மை யான அர்ப்பணிப்புடன் அவர்கள் செயற்படவில்லை. ஏற்கனவே அவர்கள் ஒற்றையாட்சிக்குள் பதின் மூன்றாவது திருத்தத்தின் அடிப்படையில் ஒரு அரசியல் அமைப்பிற்கு இணங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் தேர்தல் காலங்களில் மாத்திரம் அவர்கள் நாடகமாடுகிறார்கள் என்பதே எமது தொடர்ச்சியான குற்றச்சாட்டு.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற, தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையினதும், தனித்துவமான இறைமையினதும் அடிப்படையில் தமிழர் தாயகத்தை அங்கீகரிக்கின்ற சமஸ்டி தீர்வையே நாங்கள் கோரியிருக்கிறோம். அந்தக் கொள்கையின் அடிப்படையில் தான் தமிழ்மக்கள் பேரவையிலும் தீர்வுத் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்தை நாங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தெரியப்படுத்தியிருக்கிறோம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும், தமிழ்மக்கள் பேரவையினதும் தீர்வுத் திட்டம் சம்பந்தனுக்குத் தீவிரமாகத் தெரிகிறதெனில் அவர் ஒற்றையாட்சிக்கும், பதின்மூன்றாவது திருத்தத்திற்கும் இணங்கியிருக்கிறார் என்பதே பிரதான காரணம். சிங்களத் தேசிய வாதம் சொல்லிக் கொண்டிருக்கும் நிலைப்பாட்டிற்குச் சம்பந்தனும் இணங்கியிருப்பதால் தான் எங்களை அவர்கள் தீவிரவாதிகளாகப் பார்க்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்ட பெருந்தொகையான மக்கள் எங்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளியிட்டிருக்கவில்லை. ஆனால்,யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணி நிகழ்வுகள் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மாறானது என்பதால் குறித்த பேரணி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டாம் என எமது மக்கள் மத்தியில் தமிழரசுக் கட்சியினர் பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், எழுக தமிழ் பேரணி எங்களுக்கு ஆதரவாக இருக்கிறதோ என்னவோ கூட்டமைப்பினர் செய்யும் செயற்பாடுகளுக்கு எதிராகவே மக்கள் அணிதிரண்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.
ஆகவே, எங்கள் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்துவதை விட்டுவிட்டுப் பகிரங்கமாகச் சொல்கின்ற அரசியல் கருத்துக்களுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் உரிய பதிலைச் சொல்லுங்கள். சுமந்திரனை எங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு எத்தனையோ தடவைகள் நாங்கள் கோரினாலும் அவர் இதிலிருந்து நழுவிப் போகிறார். இன்று மக்கள் மத்தியில் செல்வதற்குத் தனக்கு ஆபத்து எனச் சுமந்திரன் பொய் கூறுகின்றார்.வாக்களித்த மக்கள் மத்தியில் முகம் கொடுக்காமல் தப்புவதற்கான யுக்தியாகவே அவர் தனக்குப் பாதுகாப்பில்லை எனக் குறிப்பிடுகிறார். உண்மையிலேயே உங்களுக்கு முதுகெலும்பு உள்ளதாயின் சம்பந்தன் எங்களுடன் ஒரு விவாதத்திற்கு வரட்டும் பார்க்கலாம் எனவும் அவர் மேலும் சவால் விடுத்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.
0 comments:
Post a Comment