//]]>

Monday, February 20, 2017

கேப்பாபிலவு நிலமீட்புப் போராட்டத்துக்கு ஆதரவாக வடபகுதி மாணவர்கள் போராட்டம் (Photos)


சிறிலங்கா விமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, பிலக்குடியிருப்பு மக்கள், கேப்பாப்பிலவு விமானப்படை முகாம் முன்பாக 21 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று மாணவர்கள் ஒரு மணிநேர கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.

 வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் முன்பாகவும், இன்று காலை 7.30 மணி தொடக்கம், 8.30 மணி வரை- இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 மாணவர்கள் தமது பாடசாலைகளுக்கு முன்பாக, பல்வேறு கோரிக்கைகள் மற்றும் வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளுடன், ஒரு மணிநேரம் இந்தப் போராட்டத்தை நடத்தினர். இதனிடையே, கேப்பாப்பிலவில், 21 ஆவது நாளாகவும், புதுக்குடியிருப்பில், 17 ஆவது நாளாகவும் இன்று காணிகள் விடுவிப்புக்கான போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றது.

 இந்த நிலையில், கிளிநொச்சி பரவிப்பாஞ்சானிலும் இன்று காலை தொடக்கம், சிறிலங்கா இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment