யாழ்.பிரதேச கலாசார அதிகார சபையின் வருடாந்தப் பொதுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை(24) பிற்பகல்-03 மணியளவில் யாழ். பிரதேச செயலக மண்டபத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பொ. தயானந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தின் போது உபகுழுக்கள் தெரிவு இடம்பெறவுள்ளதுடன் பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளமையால் மேற்படி அதிகார சபையின் கலைஞர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் கேட்டுள்ளார்.
0 comments:
Post a Comment