//]]>

Friday, March 24, 2017

உலக காசநோய் தினம் இன்று


இன்று உலக காசநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1996-ம் ஆண்டிலிருந்து உலக சுகாதார அமைப்பு மார்ச் 24-ம் தேதி காசநோய் தினமாக அறிவித்தது.

டியூபர்செல் பாசிலஸ் அல்லது டியூபர் குளோசிஸ் என்பதன் சுருக்கம்தான் டி.பி. என்று அழைக்கப்படுகிறது.

காசநோயானது மனிதருக்கு காற்று மூலம் பரவுகிறது. சுகாதாரமின்மை, காற்றோட்ட வசதி இல்லாமை, மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் இந்த நோய் ஏற்படுகிறது.

காசநோயாளிகள் இருமும்போதும், தும்மும்போதும் கிருமிகள் அருகிலுள்ளவர்களுக்குப் பரவுகிறது. அவர்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி குறையும்போது இக்கிருமி வேகமாக வளர்ந்து காசநோயின் அறிகுறிகளோடு தென்படுகிறது. உலக அளவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு மூன்று நிமிஷத்துக்கும் இரண்டு பேர் காசநோயால் இறக்கின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 22 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் 90 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது, காசநோயைக் கண்டுபிடிக்க ‘ஜீன் எக்ஸ்பர்ட்’என்ற கருவி பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் இந்தக் கருவி 100 இடங்களில் உள்ளன. இதன்மூலம் பரிசோதிக்கும்போது 75 சதவிகிதம் காசநோயை உறுதிப்படுத்த முடிகிறது. காசநோய் ஆராய்ச்சி மையத்தில் குழந்தைகளுக்கு இந்தப் பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.

2015-ம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் (WHO) இந்தியாவுக்கான பிரதிநிதியான நதா மெனப்தே கூறுகையில், ‘இந்தியாவில் காசநோயை வரும் 2050-ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு இந்தியாவில் ஆண்டுக்கு 19 முதல் 20 சதவிகித அளவுக்கு காசநோயைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், இப்போது ஆண்டுக்கு வெறும் 2 சதவிகிதம் மட்டும்தான் கட்டுப்படுத்த முடிகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

- வினிதா

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment